1.பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மற்றும் முப்படைகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு படை தலைவர் பதவியை உருவாக்குவதற்கான சர்ச்சைக்குரிய 27- வது அரசியலமைப்பு திருத்த மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் செனட் சபை அங்கீகரித்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீதான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மசோதாவின் நகல்களைக் கிழித்து பிரதமர் செபாஸ் ஷெரீப் மீது வீசினர். பின்னர் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த புதிய மசோதா அடிப்படையில் இனி பாகிஸ்தான் அரசு ஆயுதப் படைகளை சேர்ந்தவர்களுக்கு பீல்ட் மார்ஷல், விமானப்படை மார்ஷல், அட்மிரல் ஆப் தி ப்ளீட் ஆகிய பதவி உயர்வு அளிக்க முடியும். பீல்ட் மார்ஷலின் பதவி மற்றும் சலுகைகள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதே நேரத்தில் தற்போதுள்ள உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே கையாளும். இந்த மசோதா மூலம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
Win TV - Win News is an unbiased news channel that strives to provide information in a fair, balanced, and impartial manner. It presents news stories based on facts, without the influence of personal opinions, political agendas, or commercial interests. This channel prioritizes accuracy, transparency, and credibility by ensuring that all viewpoints are represented, allowing viewers to form their own informed opinions. It avoids sensationalism or the distortion of facts to push a particular narrative, offering content that is reliable, diverse, and free from undue influence. Win TV - Win News channel values journalistic integrity, providing the public with a clear understanding of events while fostering trust and confidence.

