மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Published: Saturday, October 25 2025, 08:43:16

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து  பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து  காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இந்நிலையில் கரூர் மாவட்டம், மாயனூரில் ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட  கதவணைக்கு   நேற்று 54-ஆயிரத்து 695 கன அடியாக இருந்த நீர்வரத்து   இன்று காலை நிலவரப்படி 69-ஆயரித்து ,870-கன அடியாக அதிகரித்தது. இதில் 69-ஆயிரத்து 70-கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தென்கறை வாய்க்காலில் 300-கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 200-கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும்  பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் கலப்பதாலும், தொடர்ந்து மழை செய்து வருவதால் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து  தொடர்ந்து அதிகரித்து  வருகிறது.

 


Next Story

Related News


Warning: Undefined array key "catid" in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 470

Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'AND NOT newsCat='11' AND NOT newsCat='12' AND NOT newsCat='14' ORDER BY newsI...' at line 1 in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php:472 Stack trace: #0 /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php(472): mysqli->query() #1 {main} thrown in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 472